வியாழன், 9 மார்ச், 2017

அர்த்தசாஸ்திரத்தில் இருந்துசில கருத்துக்கள்!!!


அர்த்தசாஸ்திரத்தில் இருந்துசில கருத்துக்கள்!!!


ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

Photo
அர்த்தசாஸ்திரத்தில் இருந்துசில கருத்துக்கள்!!!

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.


கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான். ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும். அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும். கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும். பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான். கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

⇔வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது. சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள்.

இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.


புதன், 8 மார்ச், 2017

இந்து மதத்தின் பெருமைகள்!!!

இந்து மதத்தின் பெருமைகள்!!!


வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...


1. தாயாக = அம்மன்2. தந்தையாக = சிவன்3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்4. குருவாக = தட்சிணாமூர்த்தி5. படிப்பாக = சரஸ்வதி6. செல்வமகளாக = லக்ஷ்மி7. செல்வமகனாக = குபேரன்8. மழையாக = வருணன்9. நெருப்பாக = அக்னி10. அறிவாக = குமரன்11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி12. உயிர் மூச்சாக = வாயு13. காதலாக = மன்மதன்14. மருத்துவனாக = தன்வந்திரி15. வீரத்திற்கு = மலைமகள்16. ஆய கலைக்கு = மயன்17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்19. வீட்டு காவலுக்கு = பைரவர்20. வீட்டு பாலுக்கு = காமதேனு21. கற்புக்கு = சீதை22. நன் நடத்தைகளுக்கு = ராமன்23. பக்திக்கு = அனுமன்24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி25. நன் சகோதரனுக்கு =லக்ஷ்மணன், கும்பகர்ணன்26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்27. மொழிக்கு = முருகன்28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதிமூலமான சக்கரத்தாழ்வார், மாயக்கிருஷ்ணன்29. தர்மத்திற்கு = கர்ணன்30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு31. பரதத்திற்கு = நடராசன்32. தாய்மைக்கு = அம்பிகை33. அன்னத்திற்கு = அன்ன பூரணி34. மரணத்திற்கு = யமன்35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்36. பிறப்பிற்கு = பிரம்மன்37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை!


இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம்!சகலமும் சிவார்ப்பணம் ஓம்சிவசிவஓம்.!!

திங்கள், 6 மார்ச், 2017

வாய்ப்பா இல்லை வாழ்கையில்..?!?!?!



திறமை இருந்தால்
திறக்காத கதவுகளே இல்லை!

வாய்ப்பு மறுக்கப்பட்டால்
மகிழ்ந்திடு!
அதை விட பெரிய
வாய்ப்புகள் காத்திருக்கிறது!!
ஒரு நாள் நீ சிலருக்கு
வாய்பளிப்பாய்!!!

துன்பம் ஒரு நாளும்
உன்னை துரத்தாது..
நீ அதன் முன்னால் ஓடி
கொண்டிருக்கிறாய்.!
தொடர்ந்து ஓடு
வெற்றி கொள்வாய்!!

வாழ்க்கை முழுக்க
போட்டிகள் இல்லை
சவால்கள் மட்டுமே!

சவாலை சமாளிப்பவன்
சாணக்கியன் ஆகிறான்..
போட்டி என்று நினைப்பவன்
ஏமாந்து போகிறான்!

அரசியல் படி
ஒரு படி முன்னேறு!

தவறை தட்டி கேட்க
வழி இல்லையெனில்…
நீ யாருக்கும் செய்யாதிரு
அதுவே சாலச்சிறந்தது!

புத்தகத்தை காதலி!
அதை விட உன்னிடம்
மனம் திறந்து பேசுபவள்
யாருமில்லை!!


வாழ்கையை வெறுக்காதே
நீ வாழப்பிறந்தவன் !

எதற்கும் தயங்காதே
வெளிப்படையாக பேசு!

ஆண் , பெண்
வித்தியாசம் இல்லாமல்
நட்பு கொள்!

உனக்கென எல்லைகள்
வகுக்காதே..
தினமும் ஒன்றை கற்றுக்கொள்..
கற்றுக் கொடு!

யார் மீதும் பரிதாபம்
கொள்ளாதே..
உன் அன்பு தான்
அவர்களுக்கு தேவை!

காதலுக்காக நட்பாகாதே ..
நட்பாகி காதல் கொள்!

யாரிடமும் கடிந்து
கொள்ளாதே
அன்பான பேச்சு
மிக பெரிய மாற்றத்தை
கொண்டு வரும்!

அனைத்தையும் ரசி
சின்ன சின்ன
விஷயத்தில் மகிழ்ச்சிக்கொள்!

எதிர் பார்ப்பை குறைத்துக்கொள்
தினமும் இசையில்
கரைந்து போ.!

நீ மகிழ்ச்சியாக வாழ்ந்திட
யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்இப்போதே மகிழ்ந்திடு
வாழ்க்கை சிறியது!

தொடர்ந்து ஓடு
நினைத்ததை அடைவாய்!!!

கடவுள் படையலை உண்பாரா?

கடவுள் படையலை உண்பாரா?

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்...

குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகி -றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ….

இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத் -தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

 “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்.

"பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்...

"நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்.

“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

 “இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.

இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?

நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம்அளவில்குறைந்துவிட்டதா?

அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை புரியவைத்த குருவிற்க்கு நன்றி கூறி இறைவனுக்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.


கடவுள் படையலை சாப்பிடுவாரா?